Wednesday 9 October 2013

புதுடெல்லி, அக்.9–
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்து விதிமுறை கொண்டு வரப்பட்டது. இரண்டு முனையில் இருந்தும் வெவ்வேறு புதிய பந்து பயன்படுத்தப்பட்டது. சோதனை முறையில் அது அமல்படுத்தப்பட்டது. வேகப்பந்து வீரர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த 2 புதிய பந்து விதி முறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய துணை கண்டங்களில் பந்துவீசும் சுழற்பந்து வீரர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது.
கடந்த மாதம் துபாயில் நடந்த ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை பெற முடியவில்லை. 2 புதிய பந்து விதிக்கான தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் மட்டுமே 2 புதிய பந்துவிதிக்கு ஆதரவு தெரிவித்தன. 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன.
ஐ.சி.சி.யில் உள்ள 10 உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் தான் மட்டுமே 2 புதிய பந்து விதி தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதற்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் 2 புதிய பந்து விதி முறையை நீக்க ஐ.சி.சி. முடிவு செய்து உள்ளது. அடுத்த கூட்டத்தில் இந்த விதியை நீக்கி முடிவை அறிவிக்கும்.
தலைமை ஐ.சி.சி. நிர்வாகி கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்டதால் 2 புதிய பந்து விதி முறையை எப்படி தொடர்ந்து அமல்படுத்த முடியும்? என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்து மூலம் கேள்வி எழுப்பி உள்ளது. இதைத் தொடர்ந்துதான் இந்த புதிய விதியை ஐ.சி.சி. நீக்கி உள்ளது.

0 comments:

Post a Comment